Ticker

6/recent/ticker-posts

Blue Moon | சுமார் 27 ஆண்டுகளுக்கு பிறகு.. வானில் தோன்றி ப்ளூ மைக்ரோ மூன்.. பொதுமக்கள் நெகிழ்ச்சி.!


சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு வானில் தோன்றிய ‘புளூ மைக்ரோ மூன்’ பொதுமக்களைக் கவர்ந்தது.

வழக்கமாக மாதத்திற்கு ஒருமுறை பெளர்ணமி வரும். ஆனால், ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் வரும்போது, இரண்டாவதாக வரும் முழு நிலவு ’ப்ளூ மூன்’ என அழைக்கப்படுகிறது. இந்த அரிய வானியல் நிகழ்வு சுமார் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிறது.

அந்த வகையில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு ‘புளூ மைக்ரோ மூன்’ என்ற அரிய நிகழ்வு நேற்று வானில் நிகழ்ந்தது. அதன்படி, தலைநகர் டெல்லியில் தோன்றிய ‘புளூ மைக்ரோ மூன்’ வானை அலங்கரித்தது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியிலும் ‘புளூ மைக்ரோ மூன்’ தென்பட்டது. பூமிக்கு மிக அருகில் நிலவு வரும்போது, வழக்கத்தை விட அளவில் பெரிதாக இருப்பதை 'சூப்பர் மூன்' என்றும், நிலவு மிகத் தொலைவில் இருக்கும்போது, வழக்கத்தை விட சிறிதாக இருப்பதை 'மைக்ரோ மூன்' எனவும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

news18


 


Post a Comment

0 Comments