
பிரேசிலில் 21 வயதுப் பெண் bungee jumping எனும் உயரத்திலிருந்து குதிக்கும் சாகச விளையாட்டின்போது கயிற்றைக் கட்டாமல் குதித்ததால் மாண்டார்.
சாவ் பாவ்லோ (Sao Paolo) மாநிலத்தின் Skeleton Bridge எனும் இடத்தில் விபரீதம் நடந்தது.
அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கயிற்றைக் கட்டத் தவறினர். அதைக் கவனிக்காமல் அவர்கள் பெண்ணைத் தள்ளிவிட்டனர்.
அந்த கோரச் சம்பவம் காணொளியாக எடுக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
காணொளியில் பக்கத்தில் இருந்தோர் பெண்ணுக்குப் பாதுகாப்புக் கயிறு கட்டப்படவில்லை என்று அலறுவது தெரிந்தது.
40 மீட்டர் உயரத்திலிருந்து அவர் தள்ளப்பட்டார்.
சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவருடைய மரணம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
அவர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் கொண்டுவருவதைப் பற்றி காவல்துறை அதிகாரிகள் ஆலோசிக்கின்றனர்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments