Ticker

6/recent/ticker-posts

El Nino | எல்நினோவால் அழிந்த பேரரசு... தலைகீழாக புரட்டி போட்ட சம்பவம்.. புரட்சியின் தொடக்க புள்ளி!


இம்மானுவேல் காண்ட்டின் மனித மைய வாதம், ஹெகலின் இயங்கியல், மார்க்ஸின் சமூகத் தத்துவங்கள் என உலகையே மாற்றியமைத்த மாபெரும் சிந்தனையாளர்களின் தோற்றத்திற்கு இந்தப் பிரெஞ்சுப் புரட்சியே தொடக்கப் புள்ளியாக அமைந்தது

"ரொட்டி இல்லையெனில் என்ன, அவர்கள் கேக் சாப்பிடலாமே?" (Let them eat cake) - 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தின் போது, பிரான்சின் ராணியும், மன்னர் 16-ஆம் லூயியின் மனைவியுமான மேரி அன்டோனெட் இப்படிச் சொன்னதாக ஒரு புகழ்பெற்ற கதை உண்டு. உண்மையில் அவர் அப்படி கூறினாரா என்பது இன்னும் ஆய்வுக்குரிய ஒன்றென்றாலும், அன்றைய பிரஞ்சு தேசத்து மக்களின் கொடூரமான பசியையும், அரச குடும்பத்தின் அறியாமையையும் இந்த ஒரு வரி நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

மோசமான மன்னராட்சி முறையாலும், சமூக ஏற்றத்தாழ்வுகளுமே பிரெஞ்சுப் புரட்சிக்கு காரணம் என வரலாற்றாய்வாளர்கள் தெரிவித்தாலும், இயற்கையின் அரூப கரங்களும் பிரஞ்சு புரட்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

எல்-நினோ: 1789-க்கு முந்தைய ஆண்டுகளில் பசிபிக் கடலில் எல்-நினோ உருவானதால், ஆசியப் பகுதிகளில் பருவமழை பொய்த்துப் போனது. இதன் விளைவாக, ஐரோப்பாவின் வளிமண்டலக் காற்றோட்டங்களிலும் (Jet streams) மாற்றம் ஏற்பட்டது. இதனால் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வழக்கத்திற்கு மாறான வானிலை நிலவியது.

இதன் விளைவு, பிரான்ஸ் நாட்டு விவசாயிகளுக்கு ஒரு பேரிடியாக அமைந்தது. 1787-88 குளிர்காலத்தில் பிரான்ஸ் நாடு தனது வரலாற்றிலேயே மிக மோசமான பனிப்பொழிவைச் சந்தித்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பனியின் கொடூரம் தாங்க முடியாமல், ஆல்ப்ஸ் மலைகளை விட்டு ஓநாய்கள் கூட ஊருக்குள் இறங்கி மனிதர்கள் வாழும் கிராமங்களுக்கு குடிபெயர்ந்ததாக கூறப்படுகிறது. பனிப்பொழிவுக்கு பிந்தைய வசந்த காலத்திலும் ராட்சச ஆலங்கட்டி மழை பெய்து, எஞ்சியிருந்த விவசாய நிலங்களும் முற்றிலுமாக நாசமாகின

கோதுமை விளைச்சல் இல்லாததால், ரொட்டியின் விலை இரண்டு மடங்காக உயர்ந்தது. பாரிஸ் நகரத்தின் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் உணவின்றி, பசியால் தவித்தனர். ஓங்கிய அதிகாரம் கொண்ட அரசையும், நில ஆதிக்கவாதிகளையும், அறிவு ஜீவிகளையும் எதிர்க்கும் காரியத்துடன் போராட்டங்கள் தொடர்ந்தன. பேக்கரிகளையும் தானியக் கிடங்குகளையும் சூறையாடினர். பிரஞ்சு புரட்சி உருவானது. பிரான்ஸ் மன்னன் 16-ஆம் லூயி கில்லட்டின் மூலம் தலையைத் துண்டித்துக் கொல்லப்பட்டான்.

பிரஞ்சு புரட்சி என்பது வெறும் உள்நாட்டு கலவரம் அல்ல. உலக அறிவுத்துறையில் மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்துப் பேராசிரியர் ந. முத்துமோகன் தனது 'ஐரோப்பியத் தத்துவங்கள்' என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.

அவரது கூற்றுப்படி, மனிதனின் சுதந்திர சிந்தனைக்கு அடிப்படையான "பிரெஞ்சுப் பொருள் முதல்வாதம்" (French Materialism) இந்தப் புரட்சியின் அடித்தளமாக அமைந்தது. அதுவரை மனிதனை அடக்கி வைத்திருந்த பழைய நம்பிக்கைகளும் அதிகாரங்களும் உடைத்தெறியப்பட்டன. இந்தப் புரட்சிக்குப் பிறகுதான் மனிதனை மையப்படுத்திய சுதந்திரமான சிந்தனைகள் ஐரோப்பாவில் துளிர்விட்டன. கடவுளையும் அரசரையும் மையமாக வைத்திருந்த நிலை மாறி, முதன்முறையாக 'மனிதனை' மையப்படுத்திய புதிய தத்துவங்கள் ஐரோப்பாவில்  துளிர்விட்டன. மதத்தின் துணையின்றி இயற்கையையும் சமூகத்தையும் நேரடியாக ஆராயும் இந்த அறிவுப் புரட்சிக்குப் பிறகுதான், உலகையே மாற்றியமைத்த மாபெரும் சிந்தனையாளர்கள் உருவானார்கள். .

உதாரணமாக, புகழ் பெற்ற தத்துவவியலாளர் இம்மானுவேல் காண்ட்டின் 'மனித மைய வாதம்', உலகை மாறும் தன்மையோடு அணுகிய ஹெகலின் 'இயங்கியல் வாதம்' (Dialectics), மற்றும் கார்ல் மார்க்ஸின் சமூக விடுதலைத் தத்துவங்கள் என அனைத்தும் தோன்றுவதற்கு இந்தப் பிரெஞ்சுப் புரட்சியும் அதன் பொருள் முதல்வாதமுமே ஆணிவேராக அமைந்த

பசிபிக் பெருங்கடலில் உருவான 'எல்-நினோ' என்ற வானிலை நிகழ்வு தான், மனித குலத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் நவீன தத்துவங்களையும் உருவாக்கியது

news18


 


Post a Comment

0 Comments