
கடந்த ஏப்ரல் மாதம் சீனாவின் 16 போர் விமானங்கள் தைவானின் எல்லைக்குள் நுழைந்த நிலையில், தைவான் பாதுகாப்பை அதிகரித்து வருகிறது.
தைவான் நாட்டைச் சுற்றி ராணுவ பலத்தைக் காட்டி சீனா அச்சுறுத்தி வரும் சூழலில், தைவானின் எல்லையில் ரோபோவை கண்காணிக்கும் பணியில் அமர்த்த தைவான் அரசு முடிவு செய்துள்ளது.
தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என உரிமை கோரும் சீனா, சமீபகாலமாக அந்நாட்டை அச்சுறுத்தி வருகிறது. தெற்கு சீன கடற்கரையில் போர்க் கப்பல்களை நிலைநிறுத்தியது மட்டுமல்லாது, தனது போர் விமானங்களையும் தைவான் எல்லைக்குள் அவ்வப்போது ஊடுருவச் செய்து பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், தெற்கு சீனா கடற்கரையில் சீனாவின் ஊடுருவலை கண்காணிக்கும் வகையில் நாய் வடிவிலான ரோபோக்களை எல்லையில் நிறுத்த தைவான் ராணுவம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய தைவானின் ராணுவ ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜென்கோ, இது சோதனை முயற்சிதான் என்றும் எதிர்காலத்தில் தேவைக்கு ஏற்ப ரோபோக்கள் எல்லையில் நிறுத்தப்படும் எனவும் கூறினார். கடந்த ஏப்ரல் மாதம் சீனாவின் 16 போர் விமானங்கள் தைவானின் எல்லைக்குள் நுழைந்த நிலையில், தைவான் பாதுகாப்பை அதிகரித்து வருகிறது.
பாதுகாப்பின் ஒருபகுதியாக தைவானின் உயர்மட்ட பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான நேஷனல் சுங்-ஷான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (NCSIST), அமெரிக்காவின் 'கோஸ்ட் ரோபாட்டிக்ஸ்' (Ghost Robotics) நிறுவனத்தின் தளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நாய் வடிவிலான அதிநவீன ரோபோக்களை வடிவமைத்துக் காட்சிப்படுத்தியுள்ளது.
பாதுகாப்புத் தேவைகளுக்கு ஏற்ப மூன்று விதமான திறன்களுடன் இந்த ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை, உளவு பார்த்தல் (எதிரிகளின் நடமாட்டத்தை ரகசியமாகத் துப்பறிவது), கண்காணிப்பு (எல்லைப் பகுதிகளில் 24 மணி நேரமும் கேமராக்கள் மற்றும் சென்சார்கள் மூலம் தீவிரமாக நோட்டமிடுவது), தாக்குதல் திறன் (இந்த ரோபோவின் முதுகில் அதிநவீனத் துப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளதால் அவசரக் காலங்களில் எதிரிகளை நோக்கிச் சுடும் திறன் கொண்டவையாக இவை உள்ளன).
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments