
ஐக்கிய அரபு அமீரகத்தில், 15 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், சமூக வலைதளங்களை உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம்.
நம் அனைவருடைய வாழ்விலும் சமூக ஊடகங்கள் என்பது, தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. 24 மணி நேரத்தில், குறைந்தது 4 மணி நேரமாவது, போன் பார்க்கும் அளவிற்கு அனைவரும் அடிக்ட் ஆகி விட்டோம். பெரியவர்கள்தான் இப்படி என்றால், குழந்தைகள் கைகளிலும், காெரோனா ஊரடங்கின் போது ஆரம்பித்த ஆன்லைன் கிளாஸ்களில் இருந்து போன்கள் தவழ ஆரம்பித்து விட்டது. இதைத்தடுக்க, பல்வேறு உலக நாடுகள், பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை!
15 வயதுக்கு கீழ் இருக்கும் சிறுவர்கள், சமூக ஊடகங்களை உபயோகிப்பதன் காரணமாக, உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகள் அதிகரித்திருப்பதாக சில ஆய்வு முடிவுகள் கூறுகிறது.
எனவே, சிறுவர்களின் நலனை கருத்தில்கொண்டு, அவர்களுக்கு சமூக ஊடகப்பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், அவற்றை முற்றிலுமாக தடைசெய்யும் வகையிலும் சில உலக நாடுகள் சமூக வலைதளத்தை பயன்படுத்த தடை விதித்திருக்கிறது.
இதன் தொடக்கமாக, கடந்த 2015ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியா நாடு 16 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்து விதித்தது. இதைத்தொடர்ந்து, மலேசியா, பிரேசில், இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தங்கள் நாடுகளில் சமூக வலைதளங்களை சிறுவர்கள் உபயோகிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் உத்தரவு:
ஐக்கிய அரபு அமீரகத்தில், (UAE) 15 வயதுக்கு உட்பட்டவர்கள், சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, இத்தடையை அமல்படுத்தும் முதல் ஆளாக ஐக்கிய அரபு அமீரகம் இருக்கிறது. இந்த தீர்மானத்தின் படி, 15 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், சமூக வலைதளங்களின் கணக்குகளை கண்காணித்து முடக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.
என்னென்ன கட்டுப்பாடுகள்:
இந்த கட்டுப்பாடுகளின்படி, 15 முதல் 16 வயதுடையவர்கள், வயதுக்கு ஏற்ற கட்டுப்பாடுகள், அறிமுகமற்ற பயனர்களுடன் ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்புகள், ஸ்கிரீனிங் மேலாண்மை கருவிகள் மற்றும் பெற்றோர் மேற்பார்வை அம்சங்கள் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு, சமூக வலைதளங்களை பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள்.
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments