Ticker

6/recent/ticker-posts

US Iran Tensions | ஈரான் முன்மொழிவில் திருத்தங்கள்? அதிபர் டிரம்ப் எடுத்த முக்கிய முடிவு!


ஈரானுடனான அமைதி ஒப்பந்தத்தில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்றுவதற்கு வழிவகை செய்யும் விதமாக நிபந்தனைகளில் திருத்தம் செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய கூட்டுப் படைகள் இணைந்து தாக்குதல் நடத்தி வந்த நிலையில், கடந்த மாதம் 9 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இருதரப்பும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

ஈரான் புதிய அம்சங்களுடன் கூடிய அமைதித் திட்டத்திற்கான முன்மொழிவை மத்தியஸ்தம் செய்யும் நாடுகள் மூலம் அமெரிக்காவுக்கு வழங்கியது. இந்த முன்மொழிவை ஏற்க முடியாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஈரானின் முன்மொழிவில் திருத்தங்கள் செய்து அனுப்பும்படி அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, ஹோர்முஸ் நீரிணை மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்றுவது தொடர்பான விவகாரங்களில் திருத்தம் செய்ய டிரம்ப் அறிவுறுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஈரானிய மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வரை அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய மாட்டோம் என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகரும், அமைதி பேச்சுவார்த்தை குழு உறுப்பினருமான முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் வாக்குறுதி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் முகமது பாகர் காலிபாஃப் கூறியுள்ளார்.

news18


 


Post a Comment

0 Comments