
கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 2008 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவருக்குச் தலைமறைவாக இருக்க உதவி ஒத்தாசை புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்னவை கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கக் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேன முன்னிலையில் இன்று (22) விசரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முன்னதாக விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு (Nnotice) அமைவாகச் சந்தேகநபரான முன்னாள் கடற்படைத் தளபதி இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
அதன்பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகைக்குத் தான் குற்றமற்றவர் என அவர் தெரிவித்ததைத் தொடர்ந்து, தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேன உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 09 ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments