
இந்தியாவுக்கு 3 மாதங்கள் சுற்றுலா சென்ற பிரிட்டிஷ் பெண்ணுக்கு மூவாண்டுகளுக்குப் பிறகு அரிய மருத்துவப் பிரச்சினை கண்டறியப்பட்டுள்ளது.
அவரது மலத்தில் ஒரு நாடாப் புழு வெளியேறியுள்ளது.
மருத்துவப் பரிசோதனைகளில் முதலில் பெரிய பிரச்சினை எதுவும் தென்படவில்லை.
ஆனால், சில மாதங்களில் கடுமையான தலைவலி, பேசுவதில் சிரமம், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றின.
பிறகு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட மூளைப் பரிசோதனையில் 38 ஒட்டுண்ணிகள் இருப்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அவருக்கு மனநோயும் மிகுந்த அச்சமும் ஏற்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
நீண்டகாலச் சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலை படிப்படியாக முன்னேறியது.
தற்போது உடலில் உள்ள ஒட்டுண்ணிகள் செயலிழந்து மூளையில் உறைந்த நிலையில் உள்ளன.
இருப்பினும், வாழ்நாள் முழுவதும் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்த அரிய நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
சமைக்கப்படாத பன்றி இறைச்சி அல்லது நாடாப் புழு முட்டைகளால் மாசடைந்த உணவு, தண்ணீர் மூலம் இந்தத் தொற்று ஏற்படலாம் என்று உலகச் சுகாதார நிறுவனம் சொல்கிறது.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments