Ticker

6/recent/ticker-posts

இன்னா நாற்பது - 4


இன்னா நாற்பது:5

சிறையில் கரும்பினைக் காத்தோம்ப லின்னா
உறைசேர் பழங்கூரை சேர்ந்தொழுக லின்னா
முறையின்றி யாளு மரசின்னா வின்னா
மறையின்றிச் செய்யும் வினை.

விளக்கம்: 
  • வேலி இல்லாத கரும்புத் தோட்டத்தைக் காப்பது துன்பமாகும். 
  • மழை பெய்தால் ஒழுகக் கூடிய வீட்டில் வசிப்பது துன்பமாகும். 
  • ஒழுங்கு முறை இல்லாமல் நடக்கும் ஆட்சியில் வாழ்வது துன்பமாகும். 
  • வெளிப் படையாகச் செய்யும் செயல்கள் துன்பமாகும்.

இன்னா நாற்பது:6

அறமனத்தார் கூறுங் கடுமொழியு மின்னா
மறமனத்தார் ஞாட்பின் மடிந்தொழுக லின்னா
இடும்பை யுடையார் கொடையின்னா வின்னா
கொடும்பா டுடையார்வாய்ச் சொல். 

விளக்கம்: 
  • நல்ல மனசு உள்ளவங்க சினத்தில் கூறும் கடும்  சொற்கள் துன்பமாகும். 
  • மன உறுதி கொண்ட வீரர்கள், போர்க் களத்தில் சோம்பி இருப்பது துன்பமாகும்.
  • கஷ்டத்திலிருப்பவர்கள், கொடை கொடுப்பது துன்பமாகும். 
  • கொடியவர்கள், கூறும் தீய சொல் துன்பமாகும்.
 (தொடரும்)

 


Post a Comment

0 Comments