
சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் நடைபெற்று வரும் நடப்பு ஆண்டுக்கான உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில், ஒரு டன் எடையைச் சுமக்கும் திறன் கொண்ட உலகின் முதல் கனரக ரோபோ குதிரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆயிரம் கிலோ எடை வரை சுமக்கும் திறன் கொண்ட இந்த கிஜி T 1000 ரோபோ குதிரையில், கனரக எடையைத் தாங்கும் வகையில் வலுவான மூட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. உயர் மின்னழுத்த அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ குதிரை, இரண்டு நாட்கள் வரை தொடர்ந்து இயங்கும் திறன் கொண்டது.
பனிப்பரப்பு, உறைபனி மற்றும் செங்குத்தான சரிவுகள் போன்ற கடினமான நிலப்பரப்புகளிலும் தடையின்றி இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments