Ticker

6/recent/ticker-posts

ஹெரோயின் வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை


.074 கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில், 35 வயதுடைய நபர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து அனுராதபுர மாகாண மேல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (30) அன்று தீர்ப்பளித்தது.

கெகிராவ, தலாவ பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு தண்டனைக்கு உள்ளாகியுள்ளார். குறித்த நபர் மீதான குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்ததாகத் தெரிவித்த நீதிமன்றம், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெற்று வந்த விசாரணைகளின் இறுதியில் இந்தத் தீர்ப்பை வழங்கியது.

தலாவ பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலொன்றின் அடிப்படையில், குறித்த பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார் .

tamilmirror


 


Post a Comment

0 Comments