
கானகத்தில் வனவாசிகளின் இரத்த உறவுகளின் பிணைப்பும் பாசமும் மங்கிப்போய்விடா நிலையில், அவ்வப்போது அங்கு கொண்டாட்டங்களும் கூத்து – கும்மாளங்களும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ரெங்க்மாவுக்கு ஆண்மகன் பிறக்கப்போகும் நற்செய்தி கேட்ட மகிழ்ச்சிப் பிரவாகத்தில் புரோகோனிஷ் கிராமத்தவர் நடுநிஷி வரை கும்மாளமிட்டுவிட்டு அவரவர் ஜாகை நோக்கி சென்றுவிட்டனர்! களைப்பு மிகுதியால் அயர்ந்து தூங்கி விட்ட செரோக்கியும், ரெங்க்மாவும் வழமைபோல் சூரியன் வெளிப்படும் வேளையில் விழித்தெழுந்தனர்.
தன் கைகள் இரண்டையும் மேலுயர்த்தித் தன் உடம்பிற்குத் தெம்பேத்திக்கொண்ட செரோக்கி, சாளரத்தினூடே வெளி யுலகை நோக்கலானான். அங்கு அவனது கண்களுக்கு முதலில் தென்பட்டது அந்தப் பென்னாம் பெரிய குழிதான்!
பலநூறு வருடங்களுக்கு முன்னர் அதனைத் தோண்டி, கானகத்திலிருந்து திரட்டி வந்தவற்றைக் கொண்டு அதனை நிரப்ப ஆரம்பித்து வைத்தவர் அங்குவாழ் மக்கள் அனைவராலும் போற்றப்பட்டுவரும் ‘ஹர்கின்ஸ்’ என்று அழைக்கப்பட்டுவந்த மூத்தவராவார்!
பரம்பரை பரம்பரையாக நிரப்பப்பட்டு வந்துள்ள குழி, நிரம்பி முடிய இன்னும் சில காலங்கள் எடுக்கலாம்!
செரோக்கிக்கு ஆண் குழந்தை பிறந்ததும் நடுவதற்கென அவனிடத்தில் அவனது தந்தையார் கொடுத்து வைத்துள்ள விதைகளை செரோக்கி குகைக்குள் பத்திரப்படுத்தி வைத்துள்ளான்.
தன் குழந்தை பிறந்தது, தான் நடப்போகும் விதையிலிருந்து, வளர்ந்துவரும் செடி மகனின் உயரத்திற்கு வந்ததும், குழியிலிருந்தவற்றை தந்தையும், மகனுமாகச் சேர்ந்து அள்ளியெடுத்துக் கானகத்து மரங்களுக்கு உரமாக இடவேண்டும்!
சாளரத்தினூடாக அந்தக் குழியையே வைத்த கண் விலகாமல் பார்த்துக்கொண்டிருந்த செரோக்கி, பிற்காலத்தில் தனக்கும், பிறக்கப்போகும் தன் மகனுக்கும் காத்திருக்கும் பொறுப்பு வாய்ந்த ‘டாஸ்கை’ ஒருகணம் நினைத்துப் பார்த்துவிட்டு, தன் மனைக்குள் திரும்பிய அவன் கண்முன் ‘செக்கோவை’ச் சுமந்தவண்ணம் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் குமாரி ரெங்க்மாவின் கனிவான முகத்தை இரசித்துவிட்டு, அதிலிருந்து வெளிப்பட்டுத் தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் அவளது மூச்சுக்காற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக சுவாசிக்கலானான்!
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments