Ticker

6/recent/ticker-posts

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-50


குறன் 245:

அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு
மல்லன்மா ஞாலங் கரி.

துன்பம் அருளுடையார்க் கில்லையே! காற்றுலாவும்
மண்ணுலகச் சான்றோரே சான்று.

குறள் 246:

பொருள்நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொமுகு வார்.

அருளற்றுத் தீமை புரித்தோர்
கடமை,பொருளை மறத்தோராம் கூறு.

குறள் 247:

அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

பொருளில்லை இல்லறம் இல்லை! கருணை
பெருகாத் துறவறம் வீண்.

குறன் 248:

பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.

பொருவளிழந்தால் மீண்டுவர வாய்ப்பிருக்கும்/ ஆனால்
அருளிழந்தால் வாய்ப்பில்லை சொல்.

குறள் 249:

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.

அறிவற்றோன் நூற்பொருள் காணான்! அதுபோல்
நெறியற்றோன் போற்றும் அறம்.

(தொடரும்)

 


Post a Comment

0 Comments