
குறள் 250:
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேற் செல்லு மிடத்து.
எளியோரைத் துன்புறுத்தும் நேரத்தில் நம்மை வலியோர் வதைப்பதை எண்ணு.
புலால்மறுத்தல்
குறள் 251:
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்.
தன்னுடலைத் தான்வளர்க்க மற்றோர் உயிருடலைத் தின்போ னிடம்கருணை ஏது?
குறள் 252:
பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு.
பொருள்பயன் இல்லை! பொருள்காவா தார்க்கு! அருள்பயன் ஊன்தின்பார்க் கில்.
குறள் 253:
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன் உடல்சுவை யுண்டார் மனம்.
பகைவருக்(கு) இரக்கமில்லை! இறைச்சி சுவைப்போர் அகத்தில் கருணையில்லை சாற்று.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments