
சிறைத்தண்டனையைத் தவிர்ப்பதற்காகச் சிங்கப்பூரிலிருந்து மீன் படகில் சட்டவிரோதமாகத் தப்பிய ஆடவர் 20 ஆண்டுகளுக்குப் பின் பிடிபட்டுள்ளார்.
பொய்யான அடையாளத்தைக் கொண்டு அவர் நாடு திரும்ப முயன்றபோது சாங்கி விமான நிலையத்தில் கைதானார்.
58 வயது டான் கி வீக்கு (Tan Khi Wie) 14 மாதம், 3 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் குடிநுழைவுச் சட்டத்தின்கீழ் 6 குற்றங்கள் புரிந்ததாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.
மேலும் 16 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.
மார்ச் 7ஆம் தேதி சாங்கி விமான நிலையத்தில் டான் கைது செய்யப்பட்டார்.
கென் ஸ்ரோனா (Ken Srona) என்ற பெயரில் இந்தோனேசியக் கடப்பிதழ் கொண்டு அவர் சிங்கப்பூருக்குள் நுழைய முயன்றார்.
குடிநுழைவுச் சோதனையின்போது அவரது உண்மையான அடையாளம் தெரிந்தது.
2002ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மோசடிக் குற்றத்திற்காக டானுக்கு 18 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அடுத்த சில மாதங்களில் அவர் சிங்கப்பூரிலிருந்து ஜொகூருக்குத் தப்பிவிட்டார்.
பின்னர் தாய்லந்துக்கும் இந்தோனேசியாவிற்கும் அவர் சென்றார்.
இந்தோனேசியாவின் ஜக்கர்த்தா நகரில் அவர் வசித்தார்.
2011ஆம் ஆண்டுக்கும் 2016ஆம் ஆண்டுக்கும் இடையே அவர் பலமுறை சிங்கப்பூருக்குப் போலி அடையாளத்துடன் வந்திருக்கிறார்
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments