Ticker

6/recent/ticker-posts

$21 பில்லியன் இழப்பீடு வழங்க மெட்டா ஒப்புதல்


பிள்ளை பாதுகாப்பு சர்ச்சையைத் தீர்க்க முயலும் மெட்டா (Meta) நிறுவனம் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

நிறுவனம் 16.68 பில்லியன் டாலர் (சுமார் 21 பில்லியன் வெள்ளி) வரை வழங்கக்கூடும்.

அமெரிக்காவில் 29 மாநிலங்கள் மெட்டா நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தன.

Instagram, Facebook ஆகிய சமூக ஊடகங்கள் பிள்ளைகளை அடிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

செயலியின் அபாயம் குறித்து பயனீட்டாளர்களுக்கு உரிய தகவல் வழங்கப்படவில்லை என்று சொல்லப்பட்டது.

பிள்ளைகளின் தனிப்பட்ட தகவல்கள் முறைதவறி சேகரிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இனி Instagram, Facebook ஆகிய சமூக ஊடகங்களைப் பதின்ம வயதினருக்கு உகந்ததாக மாற்றவும் மெட்டா சம்மதித்துள்ளது.

உதாரணத்திற்குப் பிள்ளைகள் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே சமூக ஊடகத்தைப் பயன்படுத்தும்படி நெறிமுறைகள் கொண்டுவரப்படலாம்.

seithi


 


Post a Comment

0 Comments