Ticker

6/recent/ticker-posts

மனிதர்களின் தொப்புளில் 2,400 பக்டீரியாக்கள்!


மனிதர்களின் தொப்புளில் ஆயிரக்கணக்கான நுண்ணுயிர்கள் வாழ்கின்றன என்றும், அவற்றில் பெரும்பாலானவை உடலுக்கு இயல்பாக இருக்கும் தோல் நுண்ணுயிர்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மனிதர்களின் தொப்புள் என்பது வெறும் தழும்பு அல்ல, அது ஒரு மினியேச்சர் அமேசான் காடு போன்ற ஒரு தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பாகும்.

மனிதர்களின் தொப்புள்  ஒரு மினியேச்சர் அமேசான் காடு 

அமெரிக்காவின் வட கரோலினா மாநில பல்கலைக்கழகத்தின் (North Carolina State University) விஞ்ஞானிகள் நடத்திய "தொப்புள் பல்லுயிர் பெருக்க திட்டம்" (Belly Button Biodiversity Project) என்ற ஆய்வில், மனிதர்களின் தொப்புள்களில் கிட்டத்தட்ட 2,368 க்கும் மேற்பட்ட (ஏறத்தாழ 2,400) பாக்டீரியா இனங்கள் வாழ்வது கண்டறியப்பட்டது சில ஆய்வுகளின்படி, மனிதர்களின் தொப்புளில் சுமார் 2,400-க்கும் மேற்பட்ட வகையான பக்டீரியாக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

எனினும், அவை அனைத்தும் தீங்கு விளைவிப்பவை அல்ல என்றும், பெரும்பாலானவை உடலின் இயல்பான நுண்ணுயிர் சூழலின் ஒரு பகுதியாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதேவேளை, தொப்புளை முறையாக சுத்தமாக வைத்திருக்காதபோது அழுக்கு, வியர்வை மற்றும் கிருமிகள் தேங்கி, துர்நாற்றம், தோல் எரிச்சல் மற்றும் தொற்று போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொப்புளில் வாழும் நுண்ணுயிர்களின் சமநிலை, கல்லீரல், குடல் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாக சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இருப்பினும், இது தொடர்பான ஆய்வுகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதுகுறித்து மேலதிக அறிவியல் ஆதாரங்கள் தேவைப்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில், தினசரி தனிநபர் சுகாதார பராமரிப்பில் தொப்புளை சுத்தமாக வைத்திருப்பதை பலரும் புறக்கணித்து வருவது கவலைக்குரிய விடயமாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

jvpnews


 


Post a Comment

0 Comments