
ஈகை
குறள் மொழி:96
வறியார்க்கு ஒன்றீவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து.
குறள் எண்:221
குறள் மொழியின் பொருள் :
இயன்றவரை இல்லாத ஏழைகளுக்குக் கொடுப்பது
தான் தர்மம் - ஈகை ஆகும். அதுவே நமக்கானது. மற்றபடி மற்றவர்களுக்குக் எதிர்பார்க்கும் தன்மையைக் கொண்டவை.
நபிமொழி:
"இயன்றவரை ஏழைகளுக்கு ஒரு பேரீச்சம் பழத்தின்
சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்தில் இருந்து
உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அதீஇப்னு ஹாத்திம் (ரலி)
நூல் ஆதாரம் : புகாரி 1417
தீவினையச்சம்
குறள் மொழி:97
எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.
குறள் எண்:207
குறள் மொழியின் பொருள் :
எவ்வளவு பெரிய பகையைப் பெற்றவர்களும்
அப்பகையில் இருந்து தப்பித்துக் கொள்ள இயலும். ஆனால் தீமை செய்வதால் வரும் பகையானது ஒருவரைத் தொடர்ந்து சென்று வருந்தும். ஆதலால் தீமையைத் தடுத்து நன்மை செய்வதே நலம் பயக்கும்.
நபி மொழி:
நன்மையும், தீமையும் சமமாகாது. மிக அழகானதைக்
கொண்டு (தீமையைத்) தடுப்பீராக; அவ்வாறு செய்தால்
உமக்கும், உம்மிடம் யாருக்குப் பகைமை இருக்கிறதோ அவர் நெருங்கிய நண்பரைப் போல் ஆகிவிடுவார்.
-இறைவசனம் - திருக் குர்ஆன் 41 : 34
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments