Ticker

6/recent/ticker-posts

முடக்கத்தான் கீரை ரசம்! -கலா சமையல்


தேவையான பொருட்கள்

5 பட்ட மிளகாய்
10 மிளகு
5 பல் பூண்டு
5 சிறிய வெங்காயம்
1 சிறிய துண்டு இஞ்சி
2 தேக்கரண்டி மஞ்சள்தூள்
1 தேக்கரண்டி சிறு சீரகம்
எலுமிச்சை அளவு புளி
5 கைப்பிடி முடக்கத்தான் கீரை
1 தேக்கரண்டி பெருங்காயம்
தேவையான அளவு உப்பு
தாளிக்கத் தேவையான அளவு நல்லெண்ணெய்
செய்முறை

முடக்கத்தான் கீரை, புளி, எண்ணெய் ஆகியவற்றைத் தவிர, மற்ற பொருட்களைச் சிறிய உரலில் போட்டு சிறிது கொரகொரப்பாக இடித்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு சட்டியை அடுப்பில் வைத்து, தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் இடித்து வைத்த பொருட்களைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கரைத்த புளியையும் சேர்த்து மூடி வைத்து நன்றாகக் கொதிக்க விடவும்.

மிளகாய் வாசனை நீங்கியதும் பெருங்காயம் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

ஐந்து நிமிடங்கள் கழித்து, முடக்கத்தான் கீரையைச் சேர்த்து மூடி வைக்கவும்.

இந்த ரசத்தை சூப்பாகவும் அருந்தலாம்; சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம். கீரை சாப்பிட விரும்பாதவர்கள் வடிகட்டி குடிக்கலாம்.

குறிப்பு: முடக்கத்தான் கீரையை இறுதியில் சேர்ப்பதற்குக் காரணம், அது அதிகம் வேகினால் கசப்புச் சுவை அதிகரிக்கக்கூடும். இறுதியில் சேர்ப்பதால் அதன் சுவையும் குணமும் பாதுகாக்கப்படும்.

பாரம்பரியமாக முடக்கத்தான் கீரை மூட்டு வலி, சளித் தொல்லை, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 


Post a Comment

0 Comments