Ticker

6/recent/ticker-posts

சிங்கப்பூரில் மின்-சிகரெட்டுகளை விநியோகம் செய்தவருக்குச் சிறை, $45,000 அபராதம்


சிங்கப்பூரில் மின்-சிகரெட்டுகளை விநியோகம் செய்தவருக்கு 10 மாதச் சிறைத்தண்டனையும் 45,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அவர் 34 வயது ரொய் டான் ஜுன் ஜியே (Roy Tan Jun Jie).

அபராதத்தைச் செலுத்த முடியவில்லை என்றால் அவர் கூடுதலாக ஆறு வாரம் சிறையில் கழிக்கவேண்டும்.

பணத்தால் ஈர்க்கப்பட்ட டான் ஒரு குற்றக் கும்பலில் சேர்ந்தார்.

2022ஆம் ஆண்டின் நடுப்பகுதி முதல் அக்டோபர் 2025 வரை கும்பல் மலேசியாவில் இருந்து பெறப்பட்ட மின்-சிகரெட்டுகளை விநியோகம் செய்தார் அவர்.

மலேசியாவில் இருந்த ஓர் அடையாளம் தெரியாத நபர் கும்பலை இயக்கியதாகச் சொல்லப்படுகிறது.

டான் ஒரு நாளுக்கு 15 முதல் 30 முறை மின்-சிகரெட்டுகளை விநியோகம் செய்தார்.

மாதந்தோறும் 4,000 வெள்ளி வரை பெற்றார்.

அதோடு அவர் தமது நண்பர்களின் சார்பாக மின்-சிகரெட்டுகளை வாங்கி பணம் சம்பாதித்தார்.

டான் சுமார் 45,000 வெள்ளி ஈட்டியதாகத் தெரிகிறது.

டான் போன்ற விநியோகிப்பாளர்கள் அங் மோ கியோ அவென்யூ 5இல் பொருள்களைப் பெற்றுக்கொள்வது வழக்கம்.

கடந்த ஆண்டு அக்டோபரில் அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தியபோது டானும் வேறு சிலரும் கைது செய்யப்பட்டனர்.

57,000க்கும் அதிகமான மின்-சிகரெட்டுகளும் பாகங்களும் சிக்கின.

nambikkai

 


Post a Comment

0 Comments