Ticker

6/recent/ticker-posts

4 ஆண்டுகளுக்கு முன்பே மனச்சோர்வைக் கணிக்கும் சீன விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு


நான்கு ஆண்டுகளுக்கு முன்பே ஒருவருக்கு மனச்சோர்வு (Depression) இருக்கிறதா என்பதைக் கணிக்க ஒரு புதிய கண்டுபிடிப்பா?

செயற்க்கை நுண்ணறிவு மாதிரி (AI model) ஒன்றைச் சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் பதின்ம வயதினர் மீது நடத்தப்பட்ட ஆய்வுத் தரவுகளைப் பயன்படுத்தினர் விஞ்ஞானிகள்.

மனச்சோர்வை எப்படி கணிக்க முடிகிறது?

மனச்சோர்வு இல்லாதவர்களால் மற்றவர்களின் முக பாவனைகளை எளிதாகக் கண்டறிய முடிகிறது.

முக பாவனையில் மகிழ்ச்சி வெளிப்பட்டால் அதைச் சரியாக 'மகிழ்ச்சி' என்று அவர்களால் சொல்லமுடிகிறது.

ஆனால் மனச்சோர்வு உள்ளவர்களால் முக பாவனைகளைச் சரியாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை.
மற்றவர்கள் அவர்கள் மீது கோபமாக உள்ளார்கள் என்றுதான் பெரும்பாலான நேரங்களில் உணர்வதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர்.

19 வயதினர், வெவ்வேறு முக பாவனைகளை எப்படி பார்க்கிறார்கள் என்பது ஆராயப்படுகிறது.

பின், காந்த அதிர்வுகளைக் கொண்டு அவர்களின் மூளை படமெடுக்கப்படுகிறது (MRI scan).

அவர்களின் மூளையின் செயல்பாட்டை அதன்வழி தெரிந்துகொள்ளமுடிகிறது.

அதன்மூலம் கிடைக்கும் தரவுகள் ஆராயப்பட்டு செயற்கை நுண்ணறிவு மாதிரிக்குள் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

23 வயதில், யாருக்கு மனச்சோர்வு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்பது கண்டறியப்படுகிறது.

உலகளவில் சுமார் 332 மில்லியன் பேர் கடும் மனச்சோர்வால் பாதிக்கப்படுவதாகச் சீன ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

மனச்சோர்வை முன்கூட்டியே கணிக்க முடிந்தால் அதை எதிர்த்து நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என்றும் அவர்கள் அறிவுறுத்தினர்.
 
seithi


 


Post a Comment

0 Comments