Ticker

6/recent/ticker-posts

இன்னா நாற்பது - 8


இன்னா நாற்பது - 13.

மணியிலாக் குஞ்சரம் வேந்தூர்த லின்னா
துணிவில்லார் சொல்லுந் தறுகண்மை யின்னா
பணியாத மன்னர்ப் பணிவின்னா வின்னா
பிணியன்னார் வாழு மனை.

விளக்கம்:
  • ஓசையின்றி யானையில் அமர்ந்து வரும் மன்னனின் வருகை  துன்பமாகும்.
  • நெஞ்சில் துணிவில்லாமல் பேசும் வீர வசனங்கள் துன்பமாகும். 
  • வணங்குவதற்கு தகுதியற்ற மன்னர்களை. வணங்குவது துன்பமாகும். 
  • மனம் ஒன்று பட்டு வாழ முடியாத, குடும்ப வாழ்க்கை துன்பமாகும்.
இன்னா நாற்பது - 14.

வணரொலி யைம்பாலார் வஞ்சித்த லின்னா
துணர் தூங்கு மாவின் படுபழ மின்னா
புணர்பாவை யன்னார் பிரிவின்னா வின்னா
உணர்வா ருணராக் கடை.

விளக்கம்: 
  • அடர்ந்த கூந்தலை உடைய அழகுப் பெண்கள், கணவனிடம் இணங்கி வாழாமல் இருப்பது துன்பமாகும். 
  • கொத்தாகத் தொங்கும் மாம்பழங்கள், யாருக்கும் பயன்படாமல் அழுகி கீழே விழுவது துன்பமாகும். 
  • மனமொத்து ஒற்றுமையாய் வாழும் இணையர் பிரிவது துன்பமாகும். 
  • புரிந்து கொள்ளும் நிலைமை இருந்தும், ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாமல் இருப்பது துன்பமாகும்.
(தொடரும்)


 


Post a Comment

0 Comments