Ticker

6/recent/ticker-posts

சொர்க்கம் எப்படி இருக்கும் தெரியுமா? பிரபல இன்ஃப்ளூயென்சர் வெளியிட்ட வீடியோ!


சீன இன்ஃப்ளூயென்ஸரின் கனவில் உதித்த இந்த சொர்க்கத்தில், ஆண்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது!

சொர்க்கம் என்றால் இப்படித்தான் இருக்குமாம். சீனாவைச் சேர்ந்த பிரபல சோஷியல் மீடியா Influencer கற்பனையில் உதித்த காட்சிகள், இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றன.

சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானின் செங்டு நகரில் வசித்து வருபவர் சென் அய்ஜுன். மூக்குக் கண்ணாடி கடையை நடத்தி வரும் இவருக்கு பண்டைய சீன பாரம்பரியத்தின் மீது பிடிப்பு அதிகம். அவ்வப்போது பண்டைய சீனா தொடர்புடைய ஏ.ஐ. வீடியோக்களை உருவாக்கி வந்தார். கடந்த ஆண்டு சமூக வலைதளத்தில் சில வீடியோக்களை பதிவிடத் தொடங்கினார், அவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் மடமடவென பாலோயர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இந்நிலையில் சீனப் புராணங்களில் சொர்க்கம் குறித்து இடம்பெற்றுள்ள காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு ஏ.ஐ.யில் சொர்க்கத்தை உருவாக்கினார். சொர்க்கத்தின் பல இடங்களில் படர விட்டிருக்கிறார் சென் அய்ஜுன். ஆனால் இந்த சொர்க்கத்தில் ஆண்களை அவர் இடம்பெறச் செய்யவில்லை.

news18


 


Post a Comment

0 Comments