Ticker

6/recent/ticker-posts

இலங்கையின் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாராய்ச்சி மற்றும் உற்பத்திக்காக உலகளாவிய எரிசக்தி நிறுவனங்களுக்கு அழைப்பு!


இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அகழ்வாராய்ச்சி மற்றும் உற்பத்திக்காக உலகளாவிய எரிசக்தி நிறுவனங்களுக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பொன்று இலங்கை பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபையினால் (PDASL) நாளை (25) முற்பகல் 10.00 மணிக்கு இலங்கை கனிம நெய் கூட்டுத்தாபன கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

“Sri Lanka Licensing Round 2026” உரிமச் சுற்று என்பது இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அகழ்வாராய்ச்சி மற்றும் உற்பத்திக்காக உலகளாவிய எரிசக்தி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கும் ஒரு மூலோபாய நடவடிக்கையாகும்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளின் மூலம் மேற்கு கடற்பரப்பிற்கு அப்பால் பயனுள்ள எரிவாயு இருப்புக்கள் காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கிறது.

அத்துடன், இந்த வளங்களை உரிய நேரத்தில் அபிவிருத்தி செய்வதன் மூலம் தேசிய எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்றும், அது நாட்டின் தொழிற்துறை வளர்ச்சிக்கு பெரும் பக்கபலமாக அமையும் என்றும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

lankatruth


 


Post a Comment

0 Comments