Ticker

6/recent/ticker-posts

முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாதது ஏன்?


தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் ஏன் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இடம்பெறவில்லை? இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? எனச் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.யான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) அன்று நிலையியற்கட்டளை 27/2 இன் கீழ் விசேட கூற்றை முன்வைத்தே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் பேசுகையில்,

 "தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழு என்பது நிர்வாக எல்லைகளை வரையறுக்கும் ஒரு தொழில்நுட்ப அமைப்பு மட்டுமல்ல; அது தேர்தல் பிரதிநிதித்துவம், அரசியல் சமநிலை மற்றும் மக்களின் ஜனநாயகப் பங்கேற்புடன் நேரடியாகத் தொடர்புடைய முக்கியமான சுயாதீன நிறுவனமாகும். குறிப்பாக, சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளும்போது, அப்பகுதிகளின் வரலாற்றுப் பின்னணி, மக்கள் தொகைப் பரவல், நிர்வாகத் தேவைகள் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவை சமநிலையுடன் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். 

இதற்காக, ஆணைக்குழுக்களில் நாட்டின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் நியாயமான பிரதிநிதித்துவம் இருப்பது அவசியமாகும்.
எனினும், தற்போதைய தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவர் இடம்பெறாமை அச்சமூகத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

அதேவேளை, முக்கிய தேசிய நிறுவனங்கள் மற்றும் உயர்மட்ட நியமனங்களில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் போதுமான அளவில் பிரதிபலிக்கப்படவில்லை என்ற உணர்வும் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்றார். 

tamilmirror


 


Post a Comment

0 Comments