Ticker

6/recent/ticker-posts

வயது அதிகரித்தால் தசை குறையும்


மூத்தவர்கள் மெதுவாக நடமாடுவதைப் பார்க்கலாம்.

அது உடல் மீது காலம் போடும் கோலம்.
எனவே உடலை வலுப்படுத்தும் பயிற்சிகள் அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.

மூப்பின் காரணமாக நடமாட்டம் மெதுவடைகிறது. அதற்கு ஏற்ப மெதுவாகச் செயல்படுவது இயல்பு. எனினும் அதனால் பாதிப்பு உண்டு என்கிறார் டான் டொக் செங் மருத்துவமனையின் மூத்தோர் மருத்துவப் பிரிவு ஆலோசகர் டாக்டர் சென் சூயு.

கீழே விழுந்துவிடும் அபாயம் அதிகரிக்கும், தனித்துச் செயல்பட முடியாமல் போய்விடலாம் என்கிறார் அவர்.

எனவே தசை முக்கியம்.

சிங்கப்பூரில் மூப்படையும் மக்கள் தொகை அதிகரிப்பதால் வயது காரணமாகத் தசை இழக்கும் sarcopenia பாதிப்பு கூடுகிறது. அதன் பொருட்டு சிகிச்சை நாடுவோர் எண்ணிக்கை உயர்கிறது.

விழுவது, சமநிலை கொள்வது தொடர்பான மருந்தகத்தை நாடுவோரில் 60 முதல் 80 விழுக்காட்டினர் sarcopenia அபாயத்தை எதிர்நோக்குவதாக டான் டொக் செங் மருத்துவமனை சொல்கிறது.

ஐம்பது வயதைக் கடந்தவர்களுக்கு இயற்கையாகவே ஆண்டுக்கு ஒன்று முதல் இரண்டு விழுக்காடு தசை இழப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

எனவே முதுமையில் வலுவாக இருக்க உரிய பயிற்சியும் சரியான உணவும் முக்கியம் என்கின்றனர் மருத்துவர்கள்.

seithi


 


Post a Comment

0 Comments