
சீனாவின் ஹூபே (Hubei) மாநிலத்தில் 35 வயது யூ (Yu) என்பவரின் கண்களில் சுமார் ஆயிரம் கரையான்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கண்களில் ஒருவித அசௌகரியம்...
கண் சொட்டு மருந்து பயன்படுத்தியும் பயனில்லை...
கண்களைத் தேய்த்துத் தேய்த்துப் பார்த்தார்...
பார்வை மங்கலானது...
தொடர்ந்து கண் எரிச்சல் ஏற்பட்டதால் கண் பரிசோதனைக்குச் சென்றார் யூ.
அவருக்கு டெமோடெக்ஸ் பிளெபரைட்டிஸ் (Demodex blepharitis) இருப்பது கண்டறியப்பட்டது.
டெமோடெக்ஸ் (Demodex) எனப்படும் கரையான் அவர் கண்களை ஊடுருவியுள்ளதாக மருத்துவர் தெரிவித்தார்.
அதனால் அவர் கண் இமையில் வீக்கம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
யூவின் கண் இமைகளின் முடியில் டெமோடெக்ஸ் பூச்சிகள் நிறைந்திருப்பதைக் கண்டறிந்தார் மருத்துவர்.
ஒவ்வொரு கண் இமையின் முடியிலும் எட்டு அல்லது ஒன்பது பூச்சுகள் அசைந்து கொண்டிருந்தன.
இதனால் யூவின் கண்கள் வறண்ட நிலையிலும் இருந்தன.
யூவினின் வாழ்க்கைமுறையே அவர் கண் வீக்கத்திற்குக் காரணம் என மருத்துவர் சுட்டிக்காட்டினார்.
மெத்தை உறையை நேரத்திற்கு மாற்றாதது
அதிகக் கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை உண்பது
அதிக நேரம் கைத்தொலைபேசியைப் பயன்படுத்துவது.
முக ஒப்பனையைச் சரியாக அகற்றாதது ஆகிய காரணங்களை மருத்துவர் சுட்டினார்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments