Ticker

6/recent/ticker-posts

பாம்பைக் கையாளக் கற்றுக்கொடுத்தவர் பாம்புக் கடியால் மரணம்


மலேசியாவின் தெமர்லோ (Temerloh) வட்டாரத்தில் ஒரு குடிமைத் தற்காப்புப்படை அதிகாரி பாம்பு கடித்து மாண்டார்.

பாம்பை எப்படிக் கையாள்வது என்று செய்துகாட்டிக்கொண்டிருந்தார் 39 வயது சார்ஜெண்ட் முகமது முவாஸாம் ஷா கமருதின் (Muhamad Muazam Shah Kamardin).

அப்போது அந்தப் பாம்பு அவருடைய வலது கையில் நடு விரலைக் கடித்ததாகக் கூறப்பட்டது.

அது ஒரு ராஜநாகம் (King Cobra) என்று Malay Mail செய்தித்தளம் தெரிவித்தது.

சம்பவம் நேற்று முன்தினம் காலையில் நடந்தது.

பாம்பு கடித்தவுடன் அதிகாரி ஷா கையைக் கழுவுதற்காகச் சென்றார்.

அப்போது வழியில் அவர் மயங்கிவிழுந்ததாகச் சொல்லப்பட்டது.

அதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

நேற்று முன்தினம் பின்னிரவு மணி 1.50க்கு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அவர் நேற்று அடக்கம் செய்யப்பட்டார்.

seithi


 


Post a Comment

0 Comments