Ticker

6/recent/ticker-posts

அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களுக்கு மீண்டும் ஒரு நெருக்கடி: எச்1 பி விசா வைத்திருப்போர் வேலை இழந்த பின் வழங்கப்படும் 60 நாள் அவகாசத்தை ரத்து செயதார் டிரம்ப்


அமெரிக்காவில் வெளிநாடுகளைச் சேர்ந்த திறன் வாய்ந்த தொழிலாளர்களுக்காக ஆண்டுதோறும் அரசு சார்பில் எச்-1பி விசா வழங்கப்பட்டு வருகின்றது. இதில் 70 சதவீதம் விசாக்களை இந்தியர்கள் பெறுகிறார்கள். 

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற டிரம்ப், எச்-1பி விசாக்களைப் பெறுவதற்கான நடைமுறைகளைத் தொடர்ந்து கடுமையாக்கி வருகின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன் எச்-1பி விசா கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது.

எச்-1பி விசா வைத்திருப்பவர்கள் வேலை இழந்த பிறகு அமெரிக்காவில் தங்கியிருப்பதற்காக 60 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. 

புதிய வேலைவாய்ப்புகளைத் தேடுவதற்கும் அமெரிக்காவில் தங்கியிருந்து எளிதாக வேறு நிறுவனத்திற்கு மாற்றிக்கொள்ளவும் அனுமதிக்கும் வகையில் அதிபராக ஒபாமா இருந்தபோது இந்தக் கால அவகாச வசதி சேர்க்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் அதிபர் டிரம்ப் அரசு எச்-1பி விசா வைத்திருப்போருக்கு மேலும் ஒரு பெரிய நெருக்கடியைக் கொண்டுவந்துள்ளது.

அதிபர் டிரம்ப் அரசு எச்-1பி விசா வைத்திருக்கும் பணியாளர்கள் வேலை இழந்தபின் வழங்கப்பட்டு வரும் 60 நாட்கள் கால அவகாசத்தை முற்றிலுமாக ரத்து செய்வதற்கான புதிய விதியை முன்மொழிந்திருப்பது, எச்-1பி விசா வைத்திருப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

அதிகாரிகளின் விருப்புரிமை அடிப்படையில் வழங்கப்படும் 60 நாள் அவகாசத்தை நீக்குதல் என்ற தலைப்பிலான இந்தப் புதிய விதி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதைக் கண்டு இந்தியர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

nambikkai


 


Post a Comment

0 Comments