Ticker

6/recent/ticker-posts

இந்தோனேசியக் காட்டுத்தீ - 100 சந்தேக நபர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டன


இந்தோனேசியக் காவல்துறை காட்டுத்
தீச்சம்பவங்களின் தொடர்பில் சுமார் 100 சந்தேக நபர்களின் பெயர்களை வெளியிட்டிருக்கிறது.

அவர்களில் பெரும்பாலோர், நிலத்தைச் சுத்தப்படுத்த செடிகளை வெட்டி எரிக்கும் முறையைப் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

அந்த முறை சட்டவிரோதமானது.

விசாரணை தொடர்வதாகக் கூறிய இந்தோனேசிய அரசாங்கம், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகச் சந்தேகிக்கப்படும் நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வலியுறுத்தியது.

பல வாரமாகக் காட்டுத்தீ பற்றி எரிகிறது.

சுமார் 23 மில்லியன் டன் அளவிலான கரியமில வாயு வெளியேற்றப்பட்டது.

காட்டுத்தீயால் ஏற்பட்டுள்ள புகைமூட்டம் அண்டை நாடுகளான மலேசியாவையும் சிங்கப்பூரையும் பாதித்துள்ளது.

seithi


 


Post a Comment

0 Comments