
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னர், கொழும்பு மற்றும் பல பகுதிகளில் உள்ள சுற்றுலா விடுதிகள், தேவாலயங்கள் மற்றும் ஏனைய இடங்களை இலக்கு வைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்குச் சதி செய்தல் மற்றும் தாக்குதல்களுக்கு உதவி, ஒத்துழைப்பு வழங்கியமை உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்குத் தொடரப்பட்ட 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.
எஞ்சிய 9 பிரதிவாதிகளும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்ஸங்க ஆகியோரை உள்ளடக்கிய மூன்று பேர் கொண்ட மேல்நீதிமன்ற சிறப்பு ட்ரயல்-அட்-பார் அமர்வு இந்தத் தீர்ப்பை செவ்வாய்க்கிழமை (22) அன்று மாலை 5 மணியளவில் வழங்கியது.
சுமார் ஐந்து ஆண்டுகள் நீடித்த நீண்ட விசாரணையை சிறப்பு ட்ரயல்-அட்-பார் அமர்வு கடந்த ஓகஸ்ட் 24 ஆம் திகதி நிறைவு செய்திருந்தது.
குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டவர்களுக்கான தண்டனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments