
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி மீண்டும் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விராட் கோலி - ரோஹித் சர்மா
2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடுவார்களா என்பது குறித்து இப்போதே உறுதியாகச் சொல்ல முடியாது என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், 2011 உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றவருமான ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைத் தொடரின் போது, ரோஹித் சர்மாவிற்கு 40 வயதும், விராட் கோலிக்கு 39 வயதும் பூர்த்தியாகவுள்ளது.
தற்போது இவ்விரு வீரர்களும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், கிரிக்கெட் சங்கத்தின் (CAB) வருடாந்திர விருது வழங்கும் விழாவில் பேசிய ஆஷிஷ் நெஹ்ரா, இப்போதே அவர்களின் பங்கேற்பை உறுதி செய்ய முடியாது எனக் கூறியுள்ளார்.
"கடந்த பத்தாண்டுகளில் ரோஹித்தும் விராட்டும் என்ன சாதித்திருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனால், உலகக் கோப்பைக்கு இன்னும் 13 மாதங்கள் இருப்பது நீண்ட காலமாகும். அவர்கள் இருவருமே விளையாடுவார்களா என்று இப்போது கூறுவது கடினம். வயது என்பது வெறும் எண் தான் என்றாலும், தற்போதைய கிரிக்கெட் மிக வேகமாக மாறி வருகிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்கள் : ராஜினாமா செய்தவர்களுக்கே மீண்டும் வாய்ப்பு
ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருக்கும் சுப்மன் கில் கூட இந்திய டி20 அணியில் இடம் பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய நெஹ்ரா, இந்தியக் கிரிக்கெட்டில் எதுவும் மாறலாம் என்றார்.
"அவர்கள் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு ரன்களைக் குவித்து வந்தால் ஏன் விளையாடக் கூடாது? ஆனால், ஒரு பயிற்சியாளராகவோ அல்லது தேர்வாளராகவோ தனி ஒருவரால் மட்டுமே இந்த முடிவை எடுத்துவிட முடியாது. பிசிசிஐ-யில் தேர்வுக்குழுத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் எனப் பலர் இணைந்துதான் இந்த முடிவை எடுப்பார்கள்" என்றும் அவர் விளக்கமளித்தார்.
தற்போது ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த செயல்பாட்டில் உள்ள வீரர்களில் விராட் கோலி (14,941 ரன்கள்) மற்றும் ரோஹித் சர்மா (11,895 ரன்கள்) முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். செப்டம்பர் 27 அன்று திருவனந்தபுரத்தில் தொடங்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இவர்கள் இருவரும் மீண்டும் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments