
ஏமனின் மேற்குப் பகுதிகளில் சவுதி அரேபியா 24 மணி நேரத்தில் 54 வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதற்கு முன்னதாக சவுதி அரேபிய ராணுவத் தளங்களைக் குறிவைத்து பல ஆளில்லா வானூர்திகளையும் ஏவுகணைகளையும் பாய்ச்சியதாக ஹௌதிக் குழு சொன்னது.
தாக்குதல்களைத் தொடர்ந்து தெற்கு சவுதி அரேபியாவின்சில நகரங்களில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
ஏமனின் டாயிஸ் (Taiz) மாநிலத்தில் சவுதி அரேபியத் தாக்குதலில் பாலம் ஒன்று அழிக்கப்பட்டதாக ஹௌதிக் குழுவின் தொலைக்காட்சி கூறியது. அதில் பொதுமக்கள் இருவர் மாண்டதாகவும் அது தெரிவித்தது.
ஹௌதிக் குழு கடந்த வாரம் ஏமனின் செங்கடல் கரையோரத்தையும் முக்கியமான நீரிணையையும் கைப்பற்றியது.
ஏற்கனவே அமெரிக்கா - ஈரான் போரால் ஹோர்முஸ் (Hormuz) நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் ஆதரவில் செயல்படும் ஹௌதிக் குழுவின் செயல்கள் போர் முடிவுக்கு வரும் நம்பிக்கையைக் குறைத்துவருகிறது.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments