
இரண்டு சுவர்கள் அல்லது கம்பங்களுக்கு இடையே கயிற்றைக் கட்டி அந்தரத்தில் நடப்பதை ‘ஹைலைனிங் சாகசம்’ என்போம். இதுபோன்ற சாகசங்களைச் செய்வதற்கு முறையான பயிற்சியும், துணிச்சலும் தேவை.
சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் இதுபோன்ற ஹைலைனிங் சாகசத்தை நாம் கண்டிருக்கிறோம். ஆனால் இப்போது இந்த சாகத்தைக் காண்பதே அரிதாகி விட்டது. ஏனெனில் இந்த சாகசத்தைச் செய்யும் போது சிறு தவறு ஏற்பட்டாலும், அது உயிருக்கே ஆபத்தாகி விடும்.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள லூஸ்-என்-கோஹெல்லே எனும் தொழில் நகரில் ஒரு பெண் ஹைலைனிங் சாகசத்தைச் செய்து அசத்திய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பிரான்ஸைச் சேர்ந்த தட்டனா-மோசியோ பொகுங்கா என்ற சாகசப் பெண், ஐரோப்பாவின் மிக உயரமான கசடுக் குவியல்களுக்கு இடையே உள்ள ஒரு கம்பி மீது நடந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கையில் ஒரு குச்சியைத் தவிர எவ்விதப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, கம்பி மீது நடந்து இந்த சாகசத்தை அவர் நிகழ்த்தினார். 300 அடி உயரத்தில் 400 மீட்டர் தூரத்தை அவர் 37 நிமிடங்களில் நிறைவு செய்து சாகசம் செய்தார்.
இந்த சாகசத்தை நேரில் கண்டவர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போயினர். மேலும் கைதட்டி தட்டனா-மோசியோ பொகுங்காவை பாராட்டினர்.
பிரான்ஸில் உள்ள லூஸ்-என்-கோஹெல்லே பகுதியில் உள்ள நிலக்கரிச் சுரங்கக் கசடுக் குன்றுகள், யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
தரை மட்டத்தில் இருந்து சுமார் 300 அடிக்கும் மேல் உயரம் கொண்டவை இந்த கசடுக் குன்றுகள். இரண்டு கசடுக் குன்றுகளுக்கும் இடையே 400 மீட்டர் நீளமுள்ள மெல்லிய கம்பி கட்டப்பட்டது. இந்தக் கம்பியின் மீது தான், தட்டனா-மோசியோ பொகுங்கா நடந்து சென்று சாகசம் செய்துள்ளார்.
400 மீட்டர் தூரத்தை சமநிலையை இழக்காமல் அவர் 37 நிமிடங்களில் கடந்தார். பொதுவாக இதுபோன்ற ஹைலைனிங் சாகசங்களைச் செய்யும் போது கயிற்றுடன் உடலை இணைக்கும் பாதுகாப்பு கயிறு இருக்கும். ஆனால் இந்தப் பெண் எவ்விதப் பாதுகாப்புக் கயிறும் இன்றி, தனது முழு கவனத்தையும், உடல் சமநிலையையும் மட்டுமே முழுமையாக நம்பி ‘ஃப்ரீ சோலோ’ முறையில் இந்த சாகசத்தை செய்து முடித்தார்.
ஒரு சிறிய தவறு நடந்தாலும், உயிருக்கே ஆபத்தான இந்த முயற்சியை நேர்த்திய மனக் கட்டுப்பாட்டுடன் வெற்றிகரமாக நிகழ்த்தி, உலக அரங்கில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்
பாதுகாப்புக் கயிறு இன்றி 300 அடி உயரத்தில் கம்பி மீது நடந்து சாதனை பிரான்சின் லூஸ்-என்-கோஹெல்லே என்ற தொழில் நகரில், ஐரோப்பாவின் மிக உயரமான கசடுக் குவியல்களுக்கு இடையே உள்ள ஒரு கம்பியில் பிரான்சின் தட்டனா-மோசியோ பொகுங்கா எந்தவிதப் பாதுகாப்புக் கயிறும் இன்றி நடந்து இந்தச் சாகசத்தை நிகழ்த்தினார். 400 மீட்டர் தூரத்தை அவர் 37 நிமிடங்களில் நிறைவு செய்தார்.
— BBC News Tamil (@bbctamil) September 25, 2026
சாகசத்தை நிகழ்த்திய பிறகு தட்டனா-மோசியோ பொகுங்கா கூறுகையில், “இந்தப் பகுதியில் இரண்டு கழிவுக் குன்றுகள் இருக்கின்றன. அவற்றைப் பார்ககும் போது ஒன்றோடு ஒன்றை இணைக்க வேண்டும் எனத் தோன்றியது.
உண்மையில் இந் எண்ணம் தான் இந்த சாகசத்தை செய்வதற்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது. இங்கிருக்கும் அழகான இடங்களைக் கொண்டு சிறப்பான ஒன்றை உருவாக்க நாங்கள் விரும்பினோம்” என அவர் தெரிவித்தார்.
kalkionline

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments