
பிகாரில் பலத்த மழையின் காரணமாக கங்கை உள்பட பல்வேறு நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளுக்குள் புகுந்துள்ளது.
கண்டக், கோஷி, புத்திகண்டக், புன்புன், பாக்மதி, காக்ரா ஆகிய நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பாட்னா, பாகல்பூர், வைஷாலி, சரண், பெகுசராய், ககாரியா, முங்கர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 35 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஹிமாசல பிரதேசத்தில் நடப்பு பருவமழை காலத்தில் திடீர் வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களில் இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளனர். வீடுகள், பிற கட்டடங்கள், சாலைகள், பாலங்கள் என ரூ.1,423 கோடிக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments