Ticker

6/recent/ticker-posts

“AI-ன் பெயரை மாற்ற போகிறேன்... வேறு பெயரை தேர்ந்தெடுத்து விட்டேன்” - அமெரிக்க அதிபர் டிரம்ப்!


செயற்கை நுண்ணறிவால் உலகம் அழியாது எனவும் அது வளர்ச்சியை முடக்காது எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81ஆவது கூட்டம், நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில், உலகத் தலைவர்கள் மத்தியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஈரான் உலகிலேயே மிகப்பெரிய பயங்கரவாத உற்பத்தி நாடாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.

ஈரான் மீது முழுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். எனினும், நவம்பரில் நடக்கவிருக்கும் அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஈரானுடன் ஒரு நல்ல உடன்படிக்கை ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அமெரிக்காவிடம் ஆயுதங்கள் தீர்ந்து வருவதாகக் கூறப்படுவது பொய் எனச் சாடிய டிரம்ப், ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகளின் உற்பத்தி அதிவேகமாக நடைபெற்று வருவதாகவும் விளக்கமளித்தார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஒரு முறைகேடான நிறுவனம் என விமர்சித்த அவர், அந்த அமைப்பில் உள்ள நாடுகள் விலக வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு, வளர்ச்சியை முடக்கப் போவதில்லை என்றும் டிரம்ப் திட்டவட்டமாகக் கூறினார்.

AI-ஆல் உலகம் அழியப் போகிறது என்று கூறுபவர்கள், புவி வெப்பமயமாதலால் உலகம் அழியும் என்று முன்பு பொய் சொன்ன அதே நபர்கள்தான் என்றும் சாடினார். AI என்ற வார்த்தையை மாற்றி அதற்கு சூப்பர் இன்டெலிஜென்ஸ் என்ற பொருள்படும்படி SI எனப் பெயரிடப் போவதாகவும் டிரம்ப் அறிவித்தார்.

news18


 


Post a Comment

0 Comments