Ticker

6/recent/ticker-posts

Apple நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக ஜான் டெர்னஸ் பதவியேற்கிறார்


Apple நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாகத்  ஜான் டெர்னஸ் (John Ternus)  பொறுப்பேற்கவுள்ளார்.

2011ஆம் ஆண்டிலிருந்து தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ள  டிம் குக் இனி நிர்வாகத் தலைவராகச் செயல்படுவார்.

இயந்திரப் பொறியியல் பட்டம் பெற்ற டெர்னஸ், Apple நிறுவனத்தில் 25 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.

தற்போது அவருக்கு 50 வயது.

நிறுவனத்தின் அனைத்துத் தரப்பிலும் அவருக்கு வலுவான ஆதரவு உள்ளதாகக் கூறப்படுகிறது.

செப்டம்பர் 9ஆம் தேதி, Apple நிறுவனத்தின் ஆக அண்மைய iPhone தொடரை டெர்னஸ் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் மிகவும் மெதுவாக முன்னேறுவதாக Apple நிறுவனம் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

Siriஇன் மேம்பட்ட குரல் அம்சங்களை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதங்களும் அதில் அடங்கும்.
 
nambikkai


 


Post a Comment

0 Comments