
தெஹிவளை எபனைஸர் வீதியில் உள்ள ஆறு மாடிகள் கொண்ட பள்ளிவாசல் ஒன்றிணை, பிரபல கோடீஸ்வரான T L M இம்தியாஸ் ( Hweels lanka) என்பவர் தன் பெயரில் அபகரித்தமை சம்மந்தமான காணொளி ஒன்றை ஹுனுப்பிட்டி இஸ்மத் அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் சமூக வலைத்தளங்களின் மூலம் வெளியிட்டிருந்தார்.
இதனை அடுத்து வத்தலை ஹுனுப்பிட்டியைச் சேர்ந்த இஸ்மத்துக்கு எதிராக, பள்ளிவாசல் அபகரிப்பாளரால் மூன்று நீதிமன்றங்களில் நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இவற்றில் இரண்டு வழக்குகள் நீதிமன்ற அவமதிப்பு சம்பந்தமாகவும்,ஒரு வழக்கு குறிப்பிட்ட காணொளியை இஸ்மத் அவர்கள் நீக்க வேண்டும் என்ற வேண்டுகோளின் அடிப்படையிலும், நான்காவது வழக்கு நட்டஈடு கோரியும் இஸ்மத்துக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த வாரம் கங்கொடவில நீதி மன்றத்தில் இஸ்மத்திற்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பள்ளிவாசல் சொத்து, தம்பி லெப்பை முகம்மத் இம்தியாஸ் என்பவரால் அபகரிக்கப்பட்டுள்ளது என்பதை, விசாரணை குழு அறிக்கைமூலம் சமர்ப்பித்ததால் நீதிமன்றம் இஸ்மத்துக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்ய்தது.
ஏனைய இரு வழக்குகளில் தன் மீதான வதந்தியை பரப்புவதன் மூலம் தன் பெயருக்கு அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், ஆகவே
இக்காணொளியை நீக்கக்கோரிய வழக்கும், அவர் அந்த காணொளியை தொடர்ந்து நீக்காததின் காரணமாக இவர் நீதிமன்றத்தை அவமதித்திருப்பதாகவும், பிணையை நிராகரித்து இவரை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் இவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இன்று 9 ஆம் திகதி 9 ஆம் மாதம் வழக்கை விசாரணைக்கு எடுத்த கோட்டை நீதிமன்றம் இரண்டாவது வழக்கையும் மூன்றாவது வழக்கையும்
தள்ளுபடி செய்தது.
இதனால் இக்காணொளியை தொடர்ந்தும் சமூக வலைதளத்தில் வைத்திருக்கலாம் என்பதையும், தொடர்ந்து மக்கள் இக்காணளியை பார்வையிடலாம், இஸ்மத் அவர்கள் நீதிமன்றத்தை அவமதிக்கவில்லை என்ற உறுதிப்பாட்டையும் நீதிமன்றம் வழங்கியது.
இந்த வழக்கில் இஸ்மத் சார்பாக ருடானி ஸாஹிர் தலைமைலான சட்டத்தரணிகள் குழுவும்,இம்தியாஸ் சார்பாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல், மற்றும் கோட்டை பள்ளிவாசல் நிர்வாகியும் சட்டத்தரணியுமான ருக்ஷ்தி ஹபீப் அவர்களும் வாதங்களை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
வேட்டை நிருபர்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments