
ரஷ்யாவும் வடகொரியாவும் எல்லையைக் கடக்கும் முதல் சாலை வழிப் பாலத்தைத் திறந்திருக்கின்றன.
இருநாடும் ஏற்கனவே ரயில், விமான இணைப்புகளைக் கொண்டுள்ளன.
இருதரப்புக்கு இடையே சரக்கு, பயணிகளின் போக்குவரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் புதிய பாலம் வடிவமைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அது டூமன் (Tumen) ஆற்றில் கட்டப்பட்டுள்ளது.
தினமும் 300 வாகனங்கள் வரை அதைக் கடக்கலாம் என்று ரஷ்ய அரசாங்கம் சொன்னது.
நட்பு நாடுகளுக்கு இடையில் உறவைப் பாலம் பலப்படுத்தும் என்று ரஷ்யப் பிரதமர் கூறினார்.
ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்ததிலிருந்து ரஷ்யாவும் வடகொரியாவும் ராணுவ, பொருளாதார உறவை வலுப்படுத்தியுள்ளன.
போரில் சண்டையிட ஆயிரக்கணக்கான வடகொரிய ராணுவ வீரர்கள் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டனர்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments