Ticker

6/recent/ticker-posts

கணினி அமைப்புகளுக்குள் தானே ஊடுருவி ஹேக் செய்த 'ஜெமினி' ஏஐ மாடல்.. அதிர்ச்சி தகவல்!


கூகுளின் ஜெமினி ஏஐ, மூன்று நிறுவனங்களின் கணினி அமைப்புகளை ஹேக் செய்தது. ஆனால், உண்மையான நிறுவனம் என உணர்ந்ததும் ஹேக்கிங்கை நிறுத்தியது.

கூகுள் நிறுவனத்தின் 'ஜெமினி' ஏஐ மாடல், மூன்று நிறுவனங்களின் கணினி அமைப்புகளுக்குள் தானே ஊடுருவி ஹேக் செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ மாடலை சைபர் பாதுகாப்பு மதிப்பீடுகளை நடத்தும் நிறுவனமான இர்ரெகுலர், மே மாதம் சோதனைக்குட்படுத்தியது.

சைபர் பாதுகாப்புத் திறன் குறித்த சோதனையின்போது, போலி நிறுவனங்களுக்குப் பதிலாக, தவறுதலாக இணையத்துடன் இணைக்கப்பட்டு உண்மையான மூன்று நிறுவனங்களின் கணினிகளை ஜெமினி ஏஐ மாடல் இலக்காக மாற்றியுள்ளது.

பாஸ்வேர்டுகளைத் தொடர்ந்து கணித்தும், இணையதளத்தில் கிடைத்தத் தகவல்களைப் பயன்படுத்தியும் 3 நிறுவனங்களின் ரகசிய அமைப்புகளுக்குள் ஜெமினி வெற்றிகரமாக ஊடுருவியுள்ளது.

இருப்பினும், தான் ஊடுருவியது ஒரு உண்மையான நிறுவனம் என்பதை உணர்ந்த அடுத்த கணமே, ஜெமினி தனது ஹேக்கிங் செயல்பாட்டைத் தானே நிறுத்தியதாக கூகுள் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

கூகுள் ஏஐ கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாக வெளியான தகவல், உலகளாவிய ஏஐ தொழில்நுட்ப நிறுவனங்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

news18


 


Post a Comment

0 Comments