Ticker

6/recent/ticker-posts

"தொழில் முதலீடுகள் தொடர்பான புகைப்படம் எதுவும் வரவில்லை; வேறு ஒரு போட்டோ தான் வந்துள்ளது" - ஈபிஎஸ் விமர்சனம்


தொழில் முதலீடுகள் தொடர்பான புகைப்படம் எதுவும் வரவில்லை; வேறு ஒரு புகைப்படம் தான் வந்துள்ளது" என முதல்வர் விஜயின் லண்டன் பயணம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

திருச்சி கருமண்டபத்தில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர் சிவக்குமார் இல்லத் திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, மக்களுக்கு எதுவும் செய்யாமல் ஆட்சிக்கு வந்த ஒரே கட்சி த.வெ.க தான் என்று சாடினார்.

"த.வெ.க அரசு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை சாலையில் விளையாடும் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து அழைத்து செல்வது போல் அழைத்து சென்றுள்ளார்கள். குதிரை பேரம் மூலம் விலை பேசி அதிமுக எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்துள்ளார்கள். சொந்தக்காலில் நிற்கவில்லை இரவல் காலில் தான் த.வெ.க ஆட்சி நிற்கிறது.” என்றார்.

த.வெ.க ஆட்சி நிலையானது அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் நெல்மணிகளை முறையாக கொள்முதல் செய்யாததால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி குறை கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, "தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் வெளிநாடு சென்றுள்ளதாக கூறினார்கள். ஆனால் அது தொடர்பான புகைப்படம் எதுவும் இதுவரை வரவில்லை. வேறு ஒரு புகைப்படம் தான் வந்துள்ளது." என்றார்.

த.வெ.க ஆட்சியை மோசமான ஆட்சியாக தான் பார்க்கிறோம். மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றவில்லை. இந்த ஆட்சியில் மக்களுக்கு துன்பம்தான் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது அது குறித்து சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால் முதலமைச்சர் உரிய பதில் அளிக்கவில்லை. நான் பதிலளிக்கும் பொழுது யாரும் ஓடிவிடக்கூடாது எனக் கூறிவிட்டு முதலமைச்சர்தான் ஓடிவிட்டார்” என்றும் விமர்சித்தார்.

news18


 


Post a Comment

0 Comments