Ticker

6/recent/ticker-posts

“கொளத்தூர் மக்களுக்கு கோடான கோடி நன்றி..” திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்ன காரணம்!


திமுகவின் முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 15 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் விழா நடைபெற இருந்த நேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீரென வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து விழாவுக்கு மாற்று தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாலை 5.30 மணிக்கு திமுக முப்பெரும் விழா தொடங்கியது. இந்த விழாவில் திமுக சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது மற்றும் மு.க.ஸ்டாலின் விருது ஆகியவை வழங்கப்பட்டன.

இந்நிலையில், விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “திமுக ஆட்சி காலத்தில் பொருளாதாரத்தில் தமிழ்நாடு முன்னணி நிலையில் இருந்தது. தற்போது விலைவாசி உயர்வால் பின்னோக்கி சென்றுள்ளது. தமிழக வெற்றி கழகத்தில் இருக்கக்கூடிய நிர்வாகிகளே பாலியல் குற்றத்தில் ஈடுபடுகிறார்கள். தமிழக வெற்றி கழகம் ஆட்சி காலத்தில் சட்டமும் சரியில்லை. முதலமைச்சர் விஜய்க்கு இதுப்பற்றி துளி கூட கவலை இல்லை.

இவர்களால் மக்களை எல்லா நாளும் ஏமாற்ற முடியாது. சட்டமன்றத்தில் நடக்கும் கொடுமைகளை பார்க்க வைக்காமல் இருந்ததற்கு கொளத்தூர் மக்களுக்கு கோடான கோடி நன்றி. இப்படிப்பட்ட காட்சிகளை எல்லாம் பார்க்க வைக்க முடியாமல் செய்ததற்கு நன்றி. என் மிசா வழக்கை எவருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ரீல்ஸ் வெறியினால் நூற்றாண்டு மாண்பை கொண்ட சட்டமன்றம் தன்னுடைய மாண்பு இழந்துள்ளது. நாங்கள் வட்டி மூலமாக திருப்பி தர நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்.

எவ்வளவு அகங்காரம் இருந்தால் கையில் வைத்த மை கூட காயும் முன் அதிமுக கட்சியில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்கள். இணைந்தவர்களை இந்த இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டியிடுகிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் மரணமடைந்தால்தான் இடைத்தேர்தல் என்பது வரும். தற்போது ஜனநாயகமே மரணம் அடைந்து விட்டது.” என்று பேசினார்.

news18


 


Post a Comment

0 Comments