
ஜெம் வீரமணி பாலயில் வழக்கில் கைதாகி உள்ள சாந்தி மற்றும் அவரது கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீரமணி எத்தனை ஆண்டுகள் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தார்? உள்ளிட்டவை குறித்தும் விசாரணை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெம் குழும நிறுவனங்களின் தலைவர் வீரமணி, சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான வீடியோ, தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்த விசாரணை தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவான இந்த வழக்கின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு, வழக்கை விரைவாகவும் விரிவாகவும் விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து காவல் துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் தேன்மொழி தலைமையிலான இந்த குழுவில், சென்னை மேற்கு சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் இணை ஆணையர் திஷா மிட்டல் இடம்பெற்றுள்ளார்.
இதே போல், DGP அலுவலக காவல் கண்காணிப்பாளர் முத்தரசி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு துணை ஆணையர் கீதாஞ்சலி ஆகியோரும் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்த சிறப்பு புலனாய்வுக் குழு, சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் என்று டி.ஜி.பி. மகேஷ் குமார் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைக் கேட்ட நீதிபதிகள், வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் புலன் விசாரணையை தொடரட்டும். முறையிடு தொடர்பாக மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதேபோல, வழக்கறிஞ்ர நிவ்யா, வீடியோக்கள் வெளியான விவகாரம் தொடர்பாக நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் முறையீடு செய்தார். முறையீட்டை கேட்ட நீதிபதி, மனுத்தாக்கல் செய்தால் பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments