Ticker

6/recent/ticker-posts

இந்திய எரிபொருள் இறக்குமதியை அதிகரித்த ரஷ்யா


உக்ரைன் நடத்திய ஆளில்லா விமான  தாக்குதல்களில் ரஷ்யாவின் உள்நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு திறன் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஓகஸ்ட் மாதத்தில் அதிகப்படியாக இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களை 1.72 லட்சம் தொன் வரை ரஷ்யா இறக்குமதி செய்துள்ளது.

இதில் ரஷ்ய கச்சா எண்ணெயில் இருந்து இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலும் அடங்கும் என எரிசக்தி மற்றும் தூய்மையான காற்று ஆராய்ச்சி மையம் (சி.ஆா்.இ.ஏ) தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட சி.ஆா்.இ.ஏ. மாதாந்த ஆய்வில்,ஓகஸ்ட் மாதத்தில் ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியில் 70 சதவீதத்தை இந்தியா வழங்கியுள்ளது. இதில் 7.8 கோடி யூரோ மதிப்பிலான 1.20 லட்சம் தொன் பெட்ரோலும் அடங்கும். ரஷ்யாவின் எரிபொருள் இறக்குமதி முந்தைய மாதத்தைவிட ஏழு மடங்கு அதிகமாகவும், 2025 ஆம் ஆண்டு முழுவதும் இறக்குமதி செய்யப்பட்ட அளவைவிட மூன்று மடங்கு அதிகமாகவும் இருந்தது எனத் தெரிவிக்கப்பட்டது. 

tamilmirror


 


Post a Comment

0 Comments