Ticker

6/recent/ticker-posts

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு அனைத்துலகத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை


அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் (Scott Bessent) ஈரானின் எல்லா விமான நிறுவனங்களின் சேவைகளும் நாளையிலிருந்து நிறுத்தப்படும் என்று எச்சரித்துள்ளார்.

ஈரானின் விமான நிறுவனங்களுடன் பணியாற்றும் அல்லது சேவை வழங்கும் நாடுகளும் நிறுவனங்களும் கடுமையான தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றார் அவர்.

எரிவாயுச் சேவைகள், தரையிறங்கும் சேவைகள், ஈரானிய விமான நிறுவனங்களுக்கு விமானச் சீட்டுகளை விற்பது போன்றவற்றைத்  பெசன்ட் மிரட்டல் விடுத்துள்ளார்.

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு ஆதரவாக நடந்துகொள்ளும் தரப்புகள் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.

ஈரானுக்கு எதிரான தடைகளில் அமெரிக்கா அதன் விமானத்துறையைக் குறிவைத்துள்ளது.

nambikkai


 


Post a Comment

0 Comments