Ticker

6/recent/ticker-posts

ஓட்டுநர் இல்லாத வாகனச் சேவை விரைவில்!


சிங்கப்பூரில் Alphabet நிறுவனத்தின் Waymo தானியக்க வாகனச் சேவை தொடங்கவிருக்கிறது. 

தென்கிழக்காசியாவில் முதல் நாடாகச் சிங்கப்பூரில் Waymo செயல்படும்.

போக்குவரத்து அமைச்சு, நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகியவற்றுடன் Waymo ஒப்பந்தம் செய்துள்ளது. 

அரசாங்க அமைப்புகளின் ஒப்புதல் கிடைத்தால் ஈராண்டுக்குள் Waymo வாடகை வாகனச் சேவையை எதிர்பார்க்கலாம். 

ஒரு செயலி வழியாக வாடிக்கையாளர்கள் வாகனங்களுக்கான சேவையை நாடலாம். 

தொடக்கமாக மின்சாரத்தில் இயங்கும் Jaguar I-PACE வாகனங்கள் பயன்படுத்தப்படும்.

வாகனங்கள் வரும் மாதங்களில் சிங்கப்பூருக்குத் தருவிக்கப்படும் என்று Waymo கூறியது.

வாகனங்களைச் சிங்கப்பூர் சாலைகளுக்கு ஏற்றவாறு தயாராக்க அடுத்த ஆண்டு பயிற்சி மேற்கொள்ளப்படும்.

அவ்வேளையில் ஓட்டுநர்களே கார்களை ஓட்டுவார்கள் என்று நிறுவனம் சொன்னது. 

seithi


 


Post a Comment

0 Comments