
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட், என்ஜின் கோளாறுக்கு மத்தியிலும் முதன்முறையாக விண்ணில் சுற்றுப்பாதையை அடைந்து செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தி சாதனை படைத்துள்ளது.
எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பிரமாண்ட 'ஸ்டார்ஷிப்' ராக்கெட், டெக்சாஸில் உள்ள ஸ்டார்பேஸ் ஏவுதளத்திலிருந்து 14ஆவது சோதனைப் பயணமாக விண்ணில் ஏவப்பட்டது.
Liftoff of Starship! https://t.co/40D8bXSkr2
— SpaceX (@SpaceX) September 28, 2026
பயணத்தின் போது எதிர்பாராதவிதமாக என்ஜின் ஒன்று திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே செயலிழந்த போதிலும், ஸ்டார்ஷிப் ராக்கெட் வெற்றிகரமாக விண்வெளியின் சுற்றுப்பாதையை அடைந்தது. அதில் கொண்டு செல்லப்பட்ட 26 புதிய தலைமுறை ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களையும் திட்டமிட்டபடி விண்வெளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.
10 மணி நேரம் திட்டமிடப்பட்டிருந்த இந்த விண்வெளிப் பயணம், என்ஜின் கோளாறு காரணமாக 3 மணி நேரமாக குறைக்கப்பட்டது. அதன் பின்னர், பசிபிக் பெருங்கடலில் திட்டமிட்டபடி ராக்கெட் செங்குத்தாக திரும்பி, கட்டுப்படுத்தப்பட்ட முறையில் தீப்பற்றி எரிந்தது. இந்த ராக்கெட்டை மீண்டும் மீட்கும் திட்டம் எதுவும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments