Ticker

6/recent/ticker-posts

Grand Canyon தேசியப் பூங்காவில் வெள்ளம் ஒருவர் மரணம், 15 பேர் காணவில்லை


அமெரிக்காவில் பிரபல சுற்றுலாத் தலமான Grand Canyon தேசியப் பூங்காவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

சுமார் 15 பேரைக் காணவில்லை.

தேசியப் பூங்காச் சேவை அந்தத் தகவல்களைத் தெரிவித்தது.

நேற்று முன்தினம் (29 ஆகஸ்ட்) திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து 62 பேர் வெளியேற்றப்பட்டனர்.

கொலராடோ ஆற்றுக்கு அருகே 46 வயது ஆடவரின் உடல் மீட்கப்பட்டது.

வெள்ளத்தில் பூங்காவின் ஒரே தண்ணீர்க் குழாய் சேதமடைந்ததால் அங்குத் தண்ணீர்க் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விறகு, கரியைக் கொண்டு நெருப்பு மூட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

20 கிலோமீட்டர் நீளமுள்ள அந்தக் குழாய் குடிநீர் விநியோகத்துக்கும் தீயணைப்புக்கும் பயன்படுகிறது.

வெள்ளத்தால் கட்டமைப்பும் சேதமடைந்தது.

பாலங்கள் அழிந்துபோனதால் மலையேறிகளால் பூங்காவின் மற்ற பகுதிகளுக்குச் செல்ல முடியவில்லை.

மழை பெய்ததால் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாகப் பூங்காச் சேவை தெரிவித்தது.

nambikkai

 


Post a Comment

0 Comments