Ticker

6/recent/ticker-posts

36 விநாடியில் ஒரு கிலோமீட்டர் பாய்ந்த தீ


கனடாவின் ராணுவத் தளத்தில் எதிர்பாராத வேகத்தில் தீ பரவியிருக்கிறது. 

அல்பெர்ட்டா (Alberta) மாநிலத்திலுள்ள ராணுவத் தளத்தில் ஏற்பட்ட காட்டுத்தீச் சம்பவத்தில் 4 வீரர்கள் மாண்டனர்.

சுமார் 40 பேர் காயமடைந்தனர்.

காட்டுத்தீ ஏற்பட்டிருப்பதாக ராணுவ அதிகாரிகளுக்குப் பல மணி நேரம் முன்கூட்டியே தெரியும் என்று மேஜர்- ஜெனரல் வேட் ரூத்லந்து (Wade Rutland) சொன்னார்.

ஒரு கிலோமீட்டர் தொலைவில் தீ எரிந்துகொண்டிருந்தது.

காற்றின் திசை மாறியதால் தீ ராணுவ வீரர்களை நோக்கி விரைந்தது.

அப்போது 84 வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். 

"36 விநாடிகளில் தீ ஒரு கிலோமீட்டர் பரவியது. அது வழக்கமான வேகம் அல்ல. வீரர்கள் தீயைக் கவனிக்கவில்லை," என்று ஜெனரல் ரூத்லந்து சொன்னார்.

மாண்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிலருக்குக் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.

அவர்கள் குணமடைய சில மாதங்கள் ஆகக்கூடும்.

காட்டுத்தீ எப்படி ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

அதிகாரிகளின் விசாரணை தொடர்கிறது.

seithi


 


Post a Comment

0 Comments