
வங்கக் கடலில் "அர்னாப் புயல்" உருவானதை குறிக்கும் வகையில் தமிழகம் மற்றும் புதுவையில் 9 துறைமுகங்களில் 2-ஆம்| எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்ள்ளதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களிலும் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுவதன் அர்த்தம் என்ன?
துறைமுகத்தை நேரடியாக புயல் தாக்காது என்றாலும், துறைமுகப் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் அல்லது தொலைவில் புயல் உருவாகும் சூழல் நிலவுகிறது என்பதை இந்த எச்சரிக்கை குறிக்கிறது. இந்த எச்சரிக்கை கூண்டு ஏற்றபடுவதன் மூலம், துறைமுகத்திற்கு வரும் கப்பல்கள் மற்றும் அங்குள்ள படகுகளுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்படுகிறது.
இதனிடையே புயல் உருவாகியுள்ளதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடலோரப் பகுதிகளுக்குச் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
dinakaran

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments